لِّيَجْعَلَ مَا يُلْقِى ٱلشَّيْطَٰنُ فِتْنَةً لِّلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(முடிவில்,) ஷைத்தான் கூறுவதை உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கும் உள்ளங்கள் இறுகியவர்களுக்கும் சோதனையாக ஆக்குவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் (உண்மையை விட்டு) மிக தூரமான முரண்பாட்டில்தான் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifமுடிவில், ஷைத்தான் கூறுவதை உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கும் உள்ளங்கள் இறுகியவர்களுக்கும் சோதனையாக ஆக்குவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் (உண்மையை விட்டு) மிக தூரமான முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. (இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு ஒரு காரணமாகவும் (அல்லாஹ்) ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்.