وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَلَهُۥٓ أَسْلِمُوا۟ وَبَشِّرِ ٱلْمُخْبِتِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் குர்பானியை அறுப்பதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகளின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூருவதற்காக (நாம் குர்பானியை ஏற்படுத்தினோம்). ஆக, உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, அவனுக்கே பணிந்து வழிபடுங்கள். (அல்லாஹ்விற்கு) கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிராணியை (அல்லாஹ்விற்காக அறுத்து) பலியிடுவதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகள் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூர்வதற்காக (கால் நடைகளை பலியிடுவதை ஏற்படுத்தினோம்). ஆக, நீங்கள் வணங்க வேண்டிய கடவுள், ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, அவனுக்கே பணிந்து விடுங்கள். இன்னும், (நபியே! அல்லாஹ்விற்கு) பயந்து பணிந்து கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi34. குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.