يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَٰرَىٰ وَمَا هُم بِسُكَٰرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அதை (அந்த அதிர்வை) பார்க்கின்ற நாளில் பால் கொடுப்பவள் எல்லோரும் தாம் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவார்கள் (-விட்டு விடுவார்கள்). கர்ப்பம் தரித்த பெண்கள் எல்லோரும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவார்கள். மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும் அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானது.
Tamil Translation - Omar Sharifநீங்கள் அதை பார்க்கின்ற நாளில், பாலூட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் தான் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவாள். இன்னும், கர்ப்பம் தரித்த ஒவ்வொரு பெண்ணும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவாள். இன்னும், மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். ஆனால், அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும், அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)