وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَٰنٍ مَّرِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் (ஆற்றல்) விஷயத்தில் கல்வியறிவு இன்றி தர்க்கிக்கின்றவன் மக்களில் இருக்கின்றான். (இது விஷயத்தில்) திமிரு பிடித்த கிளர்ச்சிக்காரனாகிய எல்லா ஷைத்தான்களையும் அவன் பின்பற்றுகிறான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் (ஆற்றல்) விஷயத்தில் கல்வியறிவு இன்றி தர்க்கிப்பவனும் மக்களில் இருக்கிறான். (இது விஷயத்தில்) திமிரு பிடித்த எல்லா ஷைத்தான்களையும் அவன் பின்பற்றுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. மனிதர்களில் பலர் ஏதும் அறியாமலிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கித்து வரம்பு மீறும் ஷைத்தான்களையே பின்பற்றுகின்றனர்.