إِذْ تَمْشِىٓ أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُۥ فَرَجَعْنَٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَٰكَ مِنَ ٱلْغَمِّ وَفَتَنَّٰكَ فُتُونًا فَلَبِثْتَ سِنِينَ فِىٓ أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَٰمُوسَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது சகோதரி நடந்துசென்றபோது, “அவரை பொறுப்பேற்பவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று கூறினாள். உம்மை உமது தாயிடமே நாம் திரும்பக் கொண்டு வந்தோம், அவளது கண் குளிர்வதற்காகவும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும். நீர் ஓர் உயிரை கொன்று விட்டீர். அந்த துக்கத்திலிருந்து உம்மை நாம் பாதுகாத்தோம். பல சோதனைகளில் நாம் உம்மை சோதித்தோம். ஆக, மத்யன் வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் தங்கினீர். பிறகு (உம்மை தூதராக அனுப்புவதற்குரிய) ஒரு குறிப்பிட்ட நேரத்தை மூஸாவே! நீர் அடைந்தீர்.
Tamil Translation - Omar Sharifஉமது சகோதரி (அந்த பேழையுடன்) நடந்துசென்றபோது, “அவருக்கு பொறுப்பேற்பவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” என்று (அந்த பேழையை எடுத்தவர்களிடம்) அவள் கூறினாள். ஆக, (உமது தாய்) கண் குளிர்வதற்காகவும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் உம்மை உமது தாயிடம் நாம் திரும்பக் கொண்டு வந்தோம். இன்னும் நீர் ஓர் உயிரை கொன்று இருந்தீர். ஆக, அந்த துக்கத்திலிருந்து உம்மை நாம் பாதுகாத்தோம். இன்னும் நாம் உம்மை நன்கு சோதித்தோம். ஆக, மத்யன்வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் தங்கினீர். பிறகு (உம்மை தூதராக அனுப்புவதற்கு) நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மூஸாவே! நீர் அடைந்தீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்.