caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 39

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:39

أَنِ ٱقْذِفِيهِ فِى ٱلتَّابُوتِ فَٱقْذِفِيهِ فِى ٱلْيَمِّ فَلْيُلْقِهِ ٱلْيَمُّ بِٱلسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِّى وَعَدُوٌّ لَّهُۥ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّى وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِىٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதாவது: அவரை (உமது மகனை) பேழையில் போடுவீராக! பிறகு அதை (நைல்) கடலில் போடுவீராக! கடல் அதை கரையில் எறியும். எனது எதிரி, இன்னும் அவரது எதிரி அதை எடுப்பான். (மூஸாவே!) உம்மீது அன்பை என் புறத்திலிருந்து ஏற்படுத்தினேன். என் கண்பார்வையில் நீ பராமரிக்கப்படுவதற்காக (உன்மீது பிறருக்கு அன்பை ஏற்படுத்தினேன்).
Tamil Translation - Omar Sharifஅதாவது: அவரை (நீர் செய்து வைத்திருந்த) பேழையில் போடுவீராக! பிறகு, அதை (நைல்) நதியில் போடுவீராக! நதி அதை கரையில் எறியும். எனது எதிரி, இன்னும் அவரது எதிரி அதை எடுப்பான் (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). இன்னும், உம்மீது அன்பை என் புறத்திலிருந்து ஏற்படுத்தினேன். இன்னும், என் கண் பார்வையில் (எனது நாட்டப்படி) நீ (வளர்க்கப்படுவதற்காகவும்) பராமரிக்கப்படுவதற்காக(வும் உம்மீது பிறருக்கு அன்பை ஏற்படுத்தினேன்).
Tamil Translation - Abdulhamid Baqawi39. ‘‘(உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உம்மைப் பற்றி உமது தாய் கவலை கொண்டாள். ஆகவே, உமது தாயை நோக்கி) ‘‘உம்மைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடு. அக்கடல் அதைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதை எடுத்துக்கொள்வான்'' (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). நீர் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உம் மீது என் அன்பை சொரிந்(து உம்மைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70