وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّنْهُمْ زَهْرَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களைப் போன்றவர்களுக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் இன்பமளித்தவற்றின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். அதில் (-அந்த இன்பத்தில்) அவர்களை நாம் சோதிப்பதற்காக (அதைக் கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடையே (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இ(ணைவைப்ப)வர்களில் (இவர்களைப்) போன்ற பலருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் கொடுத்த (இவ்வுலக) இன்பத்தின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். நாம் அவர்களை அதில் சோதிப்பதற்காக (கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடை (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi131. (நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.