وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْـَٔلُكَ رِزْقًا نَّحْنُ نَرْزُقُكَ وَٱلْعَٰقِبَةُ لِلتَّقْوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! உம்மிடம் நாம் உணவு எதையும் கேட்கவில்லை. நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! இன்னும், அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! நாம் (உமக்கோ மற்றவர்களுக்கோ நீர்) உணவளிக்கும்படி உம்மிடம் கேட்கவில்லை. நாமே உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi132. (நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்.