caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 130

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:130

فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا وَمِنْ ءَانَآئِ ٱلَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ ٱلنَّهَارِ لَعَلَّكَ تَرْضَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவதை நீர் பொறுத்துக் கொள்வீராக! சூரியன் உதிக்கும் முன்னரும் அது மறையும் முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) அவர்கள் கூறுவதை நீர் (பொறுமையுடன்) சகி(த்திரு)ப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் அது மறைவதற்கு முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் உமக்கு கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi130. ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70