caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 129

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:129

وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَكَانَ لِزَامًا وَأَجَلٌ مُّسَمًّى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனிடம் (அவர்களை முழுமையாக அடையவேண்டிய) ஒரு வாக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையும் முந்தி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (வரம்பு மீறியவர்களுக்கு) மரணம் ஏற்பட்டே இருக்கும்.
Tamil Translation - Omar Sharif(ஆதாரத்தை நிலை நிறுத்தாமல் அல்லாஹ் யாரையும் தண்டிக்கமாட்டான் என்ற) வாக்கும் (தண்டனை இறங்குவதற்கு என்று) ஒரு குறிப்பிட்ட தவணையும் உமது இறைவனிடம் முன்னரே முடிவாகி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (எல்லை மீறியவர்களுக்கு) அழிவு உடனே ஏற்பட்டிருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi129. (நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிட்டால் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70