caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 128

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:128

أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَٰكِنِهِمْ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّأُو۟لِى ٱلنُّهَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் அவர்களின் இருப்பிடங்களில் (கடந்து) செல்கிறார்கள். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஆக, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் (தங்கள் பயணத்தில் அழிவுக்குள்ளான) அவர்களின் இருப்பிடங்களில் செல்கிறார்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi128. இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70