caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 115

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:115

وَلَقَدْ عَهِدْنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهُۥ عَزْمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதிலும் அதில் பொறுமையாக இருப்பதிலும்) உறுதியைக் காணவில்லை.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். ஆனால், அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதில்) உறுதியைக் காணவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi115. இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70