caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 116

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:116

وَإِذْ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ أَبَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஆதமுக்கு நீங்கள் சிரம் தாழ்த்துங்கள்” என்று வானவர்களுக்கு நாம் கூறியசமயத்தை நினைவு கூர்வீராக! இப்லீஸைத் தவிர அவர்கள் (வானவர்கள் அனைவரும்) சிரம் தாழ்த்தினர். (அவன்) மறுத்து விட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi116. வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70