فَتَعَٰلَى ٱللَّهُ ٱلْمَلِكُ ٱلْحَقُّ وَلَا تَعْجَلْ بِٱلْقُرْءَانِ مِن قَبْلِ أَن يُقْضَىٰٓ إِلَيْكَ وَحْيُهُۥ وَقُل رَّبِّ زِدْنِى عِلْمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையாளனாகிய அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (அதை பிறருக்கு ஓதிக்காட்டுவதில்) அவசரப்படாதீர், அதனுடைய வஹ்யி (அது சம்பந்தப்பட்ட விளக்கம்) உமக்கு முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர். இன்னும் கூறுவீராக! “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”
Tamil Translation - Omar Sharifஆக, உண்மையாளனும் அரசனுமாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (ஒரு வசனம் இறக்கப்பட்ட பின்னர்) அதனுடைய (முழு விளக்கம் தொடர்பான) வஹ்யி உமக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவசரப்ப(ட்டு பிறருக்கு ஓதி காண்பித்து வி)டாதீர்! இன்னும், கூறுவீராக: “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”
Tamil Translation - Abdulhamid Baqawi114. உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக.