وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு மேல் மலையை உயர்த்தி உங்கள் உறுதி மொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். அதில் உள்ளதை நினைவு கூருங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி, உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். இன்னும், அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi63. 'தூர்' என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள்'' (என்று கூறினோம்.)