أَتَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ ٱلْكِتَٰبَ أَفَلَا تَعْقِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்களோ வேதத்தை ஓதுகிறீர்கள். (அவ்வாறிருக்க), உங்களை மறந்து, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? சிந்தித்து புரியமாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharifநீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi44. நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகிறீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?