caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 45

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:45

وَٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلْخَٰشِعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பொறுத்திருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அது பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi45. (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70