قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئْهُم بِأَسْمَآئِهِمْ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسْمَآئِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّىٓ أَعْلَمُ غَيْبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக" எனக் கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, "வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவற்றை நிச்சயமாக நான் அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் அறிவேன்" என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? எனக் கூறினான்.
Tamil Translation - Omar Sharifஅவன் கூறினான்: “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” ஆக, அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, அவன் கூறினான்: “வானங்கள் இன்னும் பூமியில் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான் அறிவேன். இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் நான் அறிவேன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா?”
Tamil Translation - Abdulhamid Baqawi33. (பின்னர் இறைவன்) “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (வானவர்களை நோக்கி) “பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவற்றை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்'' என்றான்.