قَالُوا۟ سُبْحَٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"நீ மகாத் தூயவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர வேறு அறிவு எங்களுக்கு அறவே இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்" எனக் கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு அறவே அறிவு இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi32. (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மிக அறிந்தவன், ஞானம் உடையவன்'' எனக் கூறினார்கள்.