caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 28

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:28

كَيْفَ تَكْفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمْ أَمْوَٰتًا فَأَحْيَٰكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? இறந்தவர்களாக இருந்தீர்களே! அவன் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharif(நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்களே! அவன் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே நீங்கள் (மறுமையில்) திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்கு) திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70