ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَآ أَنفَقُوا۟ مَنًّا وَلَآ أَذًى لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் புரிந்து, பிறகு தாங்கள் புரிந்த தர்மத்தைத் தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யாதவர்கள் அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்படமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஎவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்களோ, பிறகு தாங்கள் தர்மம் செய்ததை பின்தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. இன்னும் அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi262. எவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையும், துன்பத்தையும் (அதனோடு) சேர்க்கவில்லையோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும், அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.