أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ ٱلْمَوْتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُوا۟ ثُمَّ أَحْيَٰهُمْ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்' எனக் கூறினான். பிறகு அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவனே. எனினும், மக்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்த மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) மரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்’ எனக் கூறினான். பிறகு, அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi243. (நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனித்தீரா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள்மீது கருணையுள்ளவன் ஆவான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை.