caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 168

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:168

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُوا۟ مِمَّا فِى ٱلْأَرْضِ حَلَٰلًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَٰنِ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களே! பூமியிலுள்ளவற்றில் நல்ல அனுமதிக்கப்பட்டதையே உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.
Tamil Translation - Omar Sharifமக்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதையே உண்ணுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi168. மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறுசெய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70