caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 167

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:167

وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا۟ مِنَّا كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعْمَٰلَهُمْ حَسَرَٰتٍ عَلَيْهِمْ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபின்பற்றியவர்கள் கூறுவார்கள்: (உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு முடிந்தால் அவர்கள் எங்களைவிட்டு விலகிக் கொண்டதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிக் கொள்வோம். இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்களுக்கு மனவேதனைகளாக அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களாக இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பின்பற்றியவர்கள் (அப்போது) கூறுவார்கள்: “(உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு சாத்தியமானால் அவர்கள் எங்களைவிட்டு (இப்போது) விலகியதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்.” இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்கள் மீது கடும் துயரங்களாக அமையும்படி அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi167. தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழி காட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70