إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِى ٱلْكِتَٰبِ أُو۟لَٰٓئِكَ يَلْعَنُهُمُ ٱللَّهُ وَيَلْعَنُهُمُ ٱللَّٰعِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியிலிருந்து நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifதெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியை நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi159. நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.