caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 160

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:160

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் மன்னிப்புக்கோரி, சீர்திருத்தி, (தாங்கள் மறைத்ததை) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. அவர்களை மன்னிப்பேன். நான் மகா மன்னிப்பாளன்; மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஎவர்கள் (தங்கள் தவறுகளிலிருந்து திருந்தினார்களோ), மன்னிப்புக்கோரினார்களோ, (தங்களை) சீர்திருத்திக் கொண்டார்களோ, (தாங்கள் மறைத்த உண்மைகளை மக்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுடைய தவ்பாவை நான் அங்கீகரிப்பேன். நான்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi160. ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; மிகக் கருணையாளன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70