وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ لَوْ يَرُدُّونَكُم مِّنۢ بَعْدِ إِيمَٰنِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْحَقُّ فَٱعْفُوا۟ وَٱصْفَحُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦٓ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களில் அதிகமானவர்கள் அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர் அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால் உங்கள் நம்பிக்கைக்குப் பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக திருப்பிவிட வேண்டுமே! என்று விரும்பினார்கள். ஆகவே, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டு வரும்வரை (அவர்களை) மன்னியுங்கள்; புறக்கணியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொரு(ட்க)ளின் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharifவேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi109. வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்தும் புறக்கணித்தும் வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் பேராற்றலுடையவன் ஆவான்.