caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 110

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:110

وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள். நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள். இன்னும், நீங்கள் நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi110. மேலும், நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், ‘‘ஜகாத்' கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பிவைப்பீர்களோ அதையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால், இறப்பதற்கு முன்னரே இயன்ற அளவு நன்மை செய்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70