أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّـۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِن ذُرِّيَّةِ إِبْرَٰهِيمَ وَإِسْرَٰٓءِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَٱجْتَبَيْنَآ إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُ ٱلرَّحْمَٰنِ خَرُّوا۟ سُجَّدًا وَبُكِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள்தான் - இவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்திருக்கின்றான். (அவர்கள்) ஆதமுடைய சந்ததிகளில் உள்ள நபிமார்களில் உள்ளவர்கள். இன்னும் நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலும் இப்ராஹீம் இன்னும் இஸ்ராயீலுடைய சந்ததிகளிலும் நாம் நேர்வழிகாட்டி தேர்ந்தெடுத்தவர்களிலும் உள்ளவர்கள் ஆவர். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (பூமியில்) விழுந்து விடுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் அருள் புரிந்த இந்த நபிமார்கள் ஆதமுடைய சந்ததியிலிருந்தும்; நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலிருந்தும்; இப்ராஹீமுடைய சந்ததியிலிருந்தும், இஸ்ராயீலுடைய சந்ததியிலிருந்தும்; இன்னும், நாம் எவர்களை நேர்வழியில் செலுத்தினோமோ, தேர்ந்தெடுத்தோமோ அவர்களிலிருந்தும் உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு முன் ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (ஸுஜூதில்) விழுந்து விடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. (ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.