فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்குப் பின் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். மன இச்சைகளை பின்பற்றினர். அவர்கள் “கய்யை” (அழிவை, நாசத்தை, மோசமான நரக கிணற்றை) சந்திப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். இன்னும், காம இச்சைகளுக்கு பின்னால் சென்றனர். ஆகவே, அவர்கள் (நரக நெருப்பில் மிகப் பெரிய) தீமையை சந்திப்பார்கள். (இந்த தீமை என்பது நரகத்தில் மிக மோசமான தண்டனைகள் நிறைந்த ஒரு கிணற்றையோ அல்லது ஒரு பள்ளத்தாக்கையோ குறிக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.)
Tamil Translation - Abdulhamid Baqawi59. (இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.