caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:10

إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாலிபர்கள் குகைக்கு ஒதுங்கிய சமயத்தை (நினைவு கூர்வீராக!) “எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! எங்கள் காரியத்தில் எங்களுக்கு நல்வழியை ஏற்படுத்து” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவ்வாலிபர்கள் குகையின் பக்கம் ஒதுங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! இன்னும், எங்கள் காரியத்தில் (நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று) எங்களுக்கு நல்லறிவை(யும் நல் வழியையும்) ஏற்படுத்திக் கொடு!”
Tamil Translation - Abdulhamid Baqawi10. (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70