أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَٰبَ ٱلْكَهْفِ وَٱلرَّقِيمِ كَانُوا۟ مِنْ ءَايَٰتِنَا عَجَبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக குகை இன்னும் கற்பலகை வாசிகள் நம் அத்தாட்சிகளில் ஓர் அற்புதமாக இருக்கின்றனர் என்று எண்ணுகிறீரா?
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக குகை வாசிகளும் கற்பலகையில் பெயர்கள் எழுதப்பட்டோரும் நம் அத்தாட்சிகளில் ஓர் அற்புதமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீரா?
Tamil Translation - Abdulhamid Baqawi9. (நபியே! ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா! (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்.)