caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:7

إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْـَٔاخِرَةِ لِيَسُـۥٓـُٔوا۟ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا۟ ٱلْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا۟ مَا عَلَوْا۟ تَتْبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே. (அவைதான் துன்பப்படும்.) மறுமுறை வந்தபோது, (மீண்டும் அந்த அடியார்கள்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்கும், முதல் முறை மஸ்ஜிதில் நுழைந்தவாறு (இம்முறையும்) அதில் நுழைவதற்கும், அவர்கள் மிகைத்தவற்றையெல்லாம் அழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் அனுப்பினோம்).
Tamil Translation - Omar Sharifநீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். மேலும், நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே (தீமையாக அமையும்). ஆக, (இரண்டு வாக்குகளில்) மற்றொரு வாக்கு வந்தபோது, (மீண்டும்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்காகவும் (-தோல்வியினால் உங்கள் முகங்கள் இழிவடைந்து வாடிபோவதற்காகவும்), முதல் முறை மஸ்ஜிதில் அவர்கள் நுழைந்தவாறு (இம்முறையும்) அவர்கள் அதில் நுழைவதற்காகவும், அவர்கள் வெற்றிகொண்ட ஊர்களை எல்லாம் அழித்தொழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் உங்கள் மீது அனுப்பினோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi7. (அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70