caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:6

ثُمَّ رَدَدْنَا لَكُمُ ٱلْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَٰكُم بِأَمْوَٰلٍ وَبَنِينَ وَجَعَلْنَٰكُمْ أَكْثَرَ نَفِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை திருப்பினோம். செல்வங்கள் இன்னும் ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, (நீங்கள் திருந்தி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பியதால்) உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை (வெற்றியை) திருப்பினோம். செல்வங்கள்; இன்னும், ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். இன்னும், (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70