وَعَلَى ٱللَّهِ قَصْدُ ٱلسَّبِيلِ وَمِنْهَا جَآئِرٌ وَلَوْ شَآءَ لَهَدَىٰكُمْ أَجْمَعِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். வழிகளில் (சில) கோணலானதும் உள்ளது. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்.
Tamil Translation - Omar Sharifநேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேலும், வழிகளில் (சில) கோணலானதும் இருக்கிறது. இன்னும், அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. (மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான்.