وَٱلْخَيْلَ وَٱلْبِغَالَ وَٱلْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகனிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அவற்றை அல்லாஹ் படைத்தான்). இன்னும் நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன்) படைப்பான்.
Tamil Translation - Omar Sharifகுதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகணிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் படைத்தான்). இன்னும், நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன் உங்களுக்காக) படைப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.