وَيَوْمَ نَبْعَثُ فِى كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰٓؤُلَآءِ وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ تِبْيَٰنًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்பி, (நிராகரித்த) இவர்களுக்கு எதிரான சாட்சியாளராக உம்மைக் கொண்டு வரும் நாளில் (அந்த வேதனையை அடைவார்கள்). (நபியே!) எல்லாவற்றையும் மிக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) அந்த நாளை நினைவு கூர்வீராக! அதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்புவோம்; இன்னும், (நிராகரித்த) இவர்களுக்கு எதிராக உம்மை சாட்சியாளராக அழைத்து வருவோம். (நபியே!) எல்லாவற்றையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi89. (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களில் இருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கின்ற நாளில், உம்மை (உமக்கு முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டுவருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தான் உம்மீது இறக்கி இருக்கிறோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் பணிந்து கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது.