caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 90

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:90

إِنَّ ٱللَّهَ يَأْمُرُ بِٱلْعَدْلِ وَٱلْإِحْسَٰنِ وَإِيتَآئِ ذِى ٱلْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ وَٱلْبَغْىِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டு அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் ஞானம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70