وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَآ أَمْرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمْحِ ٱلْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவை அல்லாஹ்வுக்கே சொந்தம். ஆகவே (மறுமை நிகழும்) நேரத்தின் நிலை, பார்வை சிமிட்டுவதைப் போல் அல்லது (அதைவிட) மிக நெருக்கமானதாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifவானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவை அல்லாஹ்வுக்கே சொந்தம். மறுமையின் காரியம், கண் பார்வை சிமிட்டுவதைப் போல்; அல்லது, (அதைவிட) மிக சமீபமானதாகவே தவிர இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi77. வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமை மூடி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன் ஆவான்.