وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّٰغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَٰلَةُ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை வணங்குங்கள்; ஷைத்தானை விட்டு விலகுங்கள் என்று (போதிப்பதற்காக) எல்லா சமுதாயங்களிலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு; வழிகேடு உறுதியாகி விட்டவரும் அவர்களில் உண்டு. ஆகவே, பூமியில் சுற்றுங்கள்; (நபிகளைப்) பொய்ப்பிப்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்.
Tamil Translation - Omar Sharif“அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். ஆக, அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு. இன்னும், வழிகேடு உறுதியாகி விட்டவர்களும் அவர்களில் உண்டு. ஆக, பூமியில் பயணியுங்கள்; இன்னும், (நபிகளைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.