وَقَالَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَا عَبَدْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍ نَّحْنُ وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن دُونِهِۦ مِن شَىْءٍ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَهَلْ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلْبَلَٰغُ ٱلْمُبِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇணைவைத்தவர்கள் கூறினர்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; அவன் (கட்டளை) இன்றி எதையும் தடுத்திருக்க மாட்டோம்.” இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் பொறுப்பு) உண்டா?
Tamil Translation - Omar Sharifஇணைவைத்தவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும், அவனுடைய அனுமதி இன்றி எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்க மாட்டோம்.” இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். ஆக, தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர ஏதும் (பொறுப்பு) உண்டா?
Tamil Translation - Abdulhamid Baqawi35. இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனைத் தவிர மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்.'' இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்கள்மீது (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.)