caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 37

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:37

رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةً مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை புனிதமாக்கப்பட்ட உன் வீட்டின் அருகில், விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்காக வசிக்க வைத்தேன் எங்கள் இறைவா! ஆகவே, மக்களிலிருந்து (சிலருடைய) உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!
Tamil Translation - Omar Sharif“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!”
Tamil Translation - Abdulhamid Baqawi37. எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாய மற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்). மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனிவர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70