caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:36

رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ ٱلنَّاسِ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; எவர் எனக்கு மாறு செய்தாரோ... நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்;
Tamil Translation - Omar Sharif“என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; மேலும், எவர் எனக்கு மாறு செய்தாரோ, நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi36. என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறுசெய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவாய்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70