caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:24

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! ‘கலிமதுத் தவ்ஹீத்’ என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அதன் வேர் உறுதியாக; அதன் கிளை வானத்தில் (மிக்க உயரத்தில்) இருக்கின்ற ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பானதாகும் (அந்த வாசகம்).
Tamil Translation - Omar Sharif(நபியே! ‘கலிமதுத் தவ்ஹீத்’ என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தை போன்றாகும். அ(ந்)த (மரத்தி)ன் வேர் உறுதியானதும்; அதன் கிளை (உயரமாக) வானத்திலும் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi24. (நபியே! ‘தவ்ஹீத் கலிமா' என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எப்படி (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70