caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:8

ٱللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلْأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَىْءٍ عِندَهُۥ بِمِقْدَارٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு பெண் (கர்ப்பத்தில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் காலம்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் அறிகின்றான். எல்லாம் அவனிடம் (குறிக்கப்பட்ட) ஓர் அளவில் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharifஒவ்வொரு பெண்ணும் (வயிற்றில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (குழந்தைகளை ஈன்றெடுக்கும் காலங்கள்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் நன்கறிவான். இன்னும், (இவை அல்லாத) எல்லா காரியங்களும் அவனிடம் (நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவின்படி நடக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70