وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ قُلْ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَنْ أَنَابَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். தன் பக்கம் திரும்பியவர்களை நேர்வழி செலுத்துகிறான்.
Tamil Translation - Omar Sharifநிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், (நிராகரிப்பிலிருந்து விலகி அவன் பக்கம்) திரும்பியவர்களுக்கு அவனை நோக்கி (வருவதற்கான நேரான பாதையை) வழிகாட்டுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. (நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உம்மைக் குறிப்பிட்டு) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் அவன் நேரான வழியில் செலுத்துகிறான்.