ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அல்லாஹ்வின் நினைவைக் கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharif(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. “அல்லாஹ்வின் நினைவினால் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக.