ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا مَتَٰعٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்க்கை வசதியை விரிவுபடுத்துகிறான். (தான் நாடுகின்றவர்களுக்கு அதை) சுருக்குகிறான். (நிராகரிப்பவர்கள்) உலக வாழ்வைக் கொண்டு மகிழ்கின்றனர். உலக வாழ்வு மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும் போது) ஒரு (சொற்ப) சுகமே தவிர வேறில்லை.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு வாழ்க்கை வசதியை விசாலப்படுத்துகிறான். (தான் நாடுகிறவர்களுக்கு அதை) சுருக்கிவிடுகிறான். மேலும், (மறுமையை நிராகரிக்கின்ற) அவர்கள் உலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்கிறார்கள். உலக வாழ்க்கையோ மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும்போது) ஒரு (சொற்ப) சுகமாகவே தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi26. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே மகிழ்ச்சியடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) அற்ப சுகமே தவிர வேறில்லை.