وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ أُو۟لَٰٓئِكَ لَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் வாக்குறுதியை அது உறுதியான பின்னர் முறிப்பவர்கள், சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவிய (சொந்த பந்தத்)தை துண்டிப்பவர்கள், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம்) செய்பவர்கள் ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும் இவர்களுக்கு (நரகலோகத்தில்) மிகக் கெட்ட வீடு உண்டு.
Tamil Translation - Omar Sharifமேலும், எவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை அது உறுதியான பின்னர் முறிக்கிறார்களோ; இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை துண்டிக்கிறார்களோ; இன்னும், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம், பொது சொத்தில் கையாடல், ஊழல்) செய்கிறார்களோ ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும், இவர்களுக்கு (கடுமையான தண்டனைகள் உடைய) மிகக் கெட்ட வீடு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi25. எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார் படுத்தப்பட்டு) இருக்கிறது.