سَلَٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! (உங்களுக்கு அமைந்த இந்த சொர்க்கலோக) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று” (என்று கூறுவார்கள்).
Tamil Translation - Omar Sharifநீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! ஆக, மறுமையின் அழகிய முடிவு மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்.)